ஹர்திக் பாண்டியா அளவுகடந்த கோபம்... ரசிகர்கள் செயலால் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Mar 28, 2024 - 11:55
Mar 28, 2024 - 12:01
ஹர்திக் பாண்டியா அளவுகடந்த கோபம்... ரசிகர்கள் செயலால் அதிர்ச்சி.. நடந்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து ஐந்து கோப்பைகளை வென்று தந்தார். 

இந்த நிலையில் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவிய ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பினை கேட்டு பெற்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியும் திடீரென்று ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தார்கள். இதனையடுத்து, ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவுக்கு ஆப்பு வைத்து விட்டதாக ரசிகர்கள் கோபம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மும்பை அணி விளையாடிய முதல் போட்டியில் ரசிகர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி அதிர்ச்சி ஏற்படுத்திதுடன், ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் ரசிகர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், பொது இடம் ஒன்றில் பெரிய திரையில் மும்பை அணி தோல்வியை தழுவிய பின்னர் அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசி கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மும்பை அணி ரசிகர்கள் தங்களது செருப்பு எடுத்து திரையில் தோன்றிய ஹர்திக் பாண்டியாவை அடித்தனர். இதனால், ஹர்திக் மீது ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு கோபம் இருக்கிறது என்பதை இந்த வீடியோ காட்டுவதாக பார்க்கப்படுகின்றது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட போட்டி... அதிரடி சாதனை.. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!