மொட்டு கட்சிக்குள் குழப்பம்: வெளியேறுகிறாரா மஹிந்த.. வெளியான தகவல்!
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு, கட்சிக்கு சிரேஷ்ட தலைமைத்துவம் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் இருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ அந்த பதவிகளை வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கட்சியில் தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் பலர் இருப்பதாகவும், அதனால் யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |