மழையுடனான வானிலை தொடரும் என அறிவிப்பு
COLOMBO: இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                                COLOMBO: இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மி.மீ. 75 வரை ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிய அளவில் மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. (40-50) வரை பலத்த காற்று வீசக்கூடும்.
பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






