ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வேட்டையாடிய புவனேஷ்வர் குமார்...

இதன்பின் பெங்கால் அணி களமிறங்கிய நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வேட்டையாடிய புவனேஷ்வர் குமார்...

ரஞ்சி டிராபி போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்கியுள்ளார் புவனேஷ்வர் குமார்.

இந்த நிலையில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேச அணி களமிறங்கியது. இதில் முதல் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேச அணி வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 

இதன்பின் பெங்கால் அணி களமிறங்கிய நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார் வீழ்த்திய நிலையில், 2ஆம் நாள் ஆட்டத்தில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

பெங்கால் அணி மொத்தமாக 188 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், புவனேஷ்வர் குமார் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

இதன் மூலம் உத்தரப் பிரதேச அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்து புவனேஷ்வர் குமார் அசத்தி இருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...