ரோஹித்தின் ஓய்வை அடுத்து அணியில் அதிரடி மாற்றம்... தடை செய்யப்பட்ட வீரருக்கு இடம்? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்துவிட்டதால், ஓபனர் இடத்திற்கு கே.எல்.ராகுலை கொண்டுவர முடிவு செய்துள்ள நிலையில், மிடில் வரிசையில் ஒரு இடம் காலியாகி உள்ளது. 

ரோஹித்தின் ஓய்வை அடுத்து அணியில் அதிரடி மாற்றம்... தடை செய்யப்பட்ட வீரருக்கு இடம்? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, விளையாட உள்ளது. 2007ஆம் ஆண்டில், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியப் பிறகு, தற்போதுவரை இந்திய அணியால் அங்கு தொடரை வெல்ல முடியவில்லை.

கடந்த முறை, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் மட்டுமே செய்ததுடன், இந்திய அணி வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருந்தும், தொடரை கைப்பற்ற முடியவில்லை.

இந்திய டெஸ்ட் அணி, அடுத்தடுத்து இரண்டு தொடர்களை இழந்திருப்பதால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ கவனமாக தேர்வு செய்து வருகிறது.
 
ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்துவிட்டதால், ஓபனர் இடத்திற்கு கே.எல்.ராகுலை கொண்டுவர முடிவு செய்துள்ள நிலையில், மிடில் வரிசையில் ஒரு இடம் காலியாகி உள்ளது. 

அந்த இடத்திற்கு, கருண் நாயரை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கருண் நாயருக்கு பேக்கப்பாக சர்பரஸ் கானை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகின்றது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது, 4ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில், ஓய்வு அறையில் நடந்த விவாதங்கள் பத்திரிகையில் வெளி வந்ததாக தகவல் வெளியானது.

இந்த விவாகரத்தில் சர்பரஸ் கான் மீது தவறு உறுதியானதால், இனி இவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என அப்போது, பிசிசிஐ மீட்டிங்கில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானது என்பதால், சர்பரஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பிசிசிஐ மீட்டிங்கில் சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மா விலகிவிட்டதால், புதுக் கேப்டனாக ஷுப்மன் கில்லை தேர்வு செய்ய உள்ளதாகவும், ஒருநாள் பார்மெட்டிலும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கவும் பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.