விம்பிள்டன் காலிறுதி... மைதானத்திற்கு வந்த விராட் கோலிக்கு ஏற்பட்ட அவமானம்!

விம்பிள்டன் 2025 ஆம் ஆண்டு டென்னிஸ் தொடரின் கால இறுதி சுற்றுக்கு 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றிருக்கிறார்.
38 வயதான ஜோகோவிச், 25 வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் எப்போதுமே ஒரு செட்டை கூட இழக்காமல் விளையாடும் ஜோகோவிச் ஆட்டத்தில் தடுமாறினார்.
நான்காவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 11வது நிலை வீரரான டி மியானருடன் ஜோகோவிச் பலப்பரிட்சை நடத்தி முதல் செட்டை ஜோகோவிச் ஒன்றுக்கு ஆறு என்ற கணக்கில் மோசமாக இழந்தார்.
இதை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6க்கு 4 6க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச் அபாரமாக விளையாடினார். இந்த சூழலில் ஜோகோவிச் நான்காவது செட்டில் 4 க்கு ஒன்று என்ற கணக்கில் பின்தங்கி மோசமான நிலையில் இருந்தார்.
எனினும் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று ஆறுக்கு நான்கு என்ற கணக்கில் வென்று 11வது முறையாக விம்பிள்டன் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்று இருக்கிறார்.
இந்த போட்டியை பார்ப்பதற்கு பிரபல டென்னிஸ் ஜாம்பவான் பெடரர் வந்த நிலையில், அவரை பலமுறை தொலைக்காட்சி கேமராவில் காண்பித்தார்கள்.
ஆனால், இந்த போட்டியை நேரில் பார்த்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை தொலைக்காட்சியில் காட்டவே இல்லை.
இந்த போட்டியை பார்த்த கோலியை தொலைக்காட்சியில் காட்டாமல் இருட்டடிப்பு செய்து அவரை அவமதித்து விட்டதாக கோலி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.