அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை 

அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.

Oct 23, 2024 - 15:08
Oct 23, 2024 - 15:15
அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை 

அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!