திட்டமிட்டு புறக்கணித்தனர்... திடீரென்று ஓரங்கட்டினர்... இல்லாவிட்டால் 700 விக்கெட் எடுத்திருப்பேன்: இந்திய வீரர் ஆதங்கம்!
இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்து, பிறகு விரக்தியில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு அறிவித்தார்.
இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்து, பிறகு விரக்தியில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு அறிவித்தார்.
அத்துடன், இர்பான் பதான் விளையாடிய கடைசி ஒருநாள், டி20 போட்டிகளில், ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். மேலும், டெஸ்டில் கடைசி 2ஆவது போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இப்படி நல்ல பார்மில் இருந்த வீரரை திடீரென்று ஓரங்கட்டினர். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சேர்த்து, 301 விக்கெட்களைதான் எடுத்தார். இர்பான் பதான், மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்தும் கூட 29 டெஸ்டில் தான், ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
120 ஒருநாள் போட்டிகள், 24 டி20 போட்டிகளில்தான் விளையாடினார். இதில், டெஸ்டில் 100 விக்கெட்களையும், ஒருநாள் பார்மெட்டில் 173 விக்கெட்களையும், டி20-யில் 28 விக்கெட்களையும் எடுத்தார்.
பேட்டிங்கிலும் இர்பான் பதான் டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். மேலும், ஒருநாள் பார்மெட்டில், ஒரு போட்டியில் அதிகபட்சமாக 83 ரன்களை எடுக்க முடிந்தது.
டி20 பார்மெட்டில், 24.57 சராசரியில் ரன்களை எடுத்து, சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். பந்துவீச்சு மற்றும் ஆல்-ரவுண்டர் தரவரிசையில், மூன்று பார்மெட்டிலும், டாப் 10 இடத்திற்குள் வந்து, சாதனையை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட்டும், திடீரென்று புறக்கணிக்கப்பட்டமை குறித்து, தற்போது தனது அதிருப்தியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘‘கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து, ஆட்ட நாயகன் விருதை வென்றேன். கடைசி டி20 போட்டியிலும் 3 விக்கெட்களை எடுத்து, ஆட்ட நாயகன் விருதை வென்றேன். எனது கடைசி 2ஆவது டெஸ்டில், ஆட்ட நாயகன் விருதை வென்றேன். எனது கடைசி டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவுட் ஆகாமல் பேட்டிங் செய்தேன். இதற்குமேல் என்ன எதிர்பார்த்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு போதுமான வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். மூன்று பார்மெட்களிலும் சேர்த்து, 301 விக்கெட்களைதான் எடுக்க முடிந்தது. 700 விக்கெட்கள் வரை என்னால் எடுத்திருக்க முடியும். என்னை ஏன், திடீரென்று ஓரங்கட்டினார்கள் என்பது குறித்து, தற்போது வரை சிந்தித்து வருகிறேன்” என்றார்.
