டிராவிட் மகனா இது... 18 வயதிலேயே மிரட்டும் சமித்... தரமான சம்பவம்!

இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசாக  இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார்.

Jan 13, 2024 - 23:54
Jan 14, 2024 - 00:14
டிராவிட் மகனா இது... 18 வயதிலேயே மிரட்டும் சமித்... தரமான சம்பவம்!

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

உள்ளூரு கிரிக்கெட் போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் பெரியளவில் செயல்பட்டதில்லை. மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கோவா அணிக்கு மாறினார். 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசாக  இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார்.

18 வயதாகும் சமித் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட் தொடரான யு18 கோச் பெகார் டிராபி தொடரில் கர்நாடகா அணிக்காக களமிறங்கியுள்ளார்.

இஷான் கிஷனுக்கு ஆப்பு உறுதியானது... இனி அவ்வளவுதான்... ரோஹித் சர்மா போட்ட மாஸ்ட் பிளான்!

இந்த சீசனில் மட்டும் 7 போட்டிகளில் ஆடியுள்ள சமித் டிராவிட் 3 அரைசதங்கள் உட்பட 370 ரன்களை விளாசியுள்ளார். சமித் டிராவிட் நல்ல ஆல்ரவுண்டர் ஆவார்.

யு18 கோச் பெகார் டிராபியின் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கர்நாடகா அணி விளையாடியதுடன், மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 

இந்த போட்டியில் 19 ஓவர்களை வீசிய சமித் டிராவிட் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் சமித் டிராவிட் பந்துவீசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

அந்த வீடியோவில் சமித் டிராவிட் நல்ல லெந்தில் பிட்ச் செய்து பந்தை வீசுகிறார். இதனால் விரைவில் சமித் டிராவிட் ஐபிஎல் தொடரில் நெட் பவுலராக இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

அதேபோல், தந்தை - பயிற்சியாளர் என்று இரண்டு ரோலையும் செய்ய வேண்டிய நிலை வரும் என்பதால் ராகுல் டிராவிட் தனது மகனுக்கு பயிற்சியளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!