பிரித்தானியாவில் தீ விபத்து: குழந்தை உயிரிழப்பு, ஒருவர் பலத்த காயம்
தீயானது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் அமைந்துள்ள ஹாம்ஸ்ட்ரீட் கிராமத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் ஆக்ஸ்போர்ட் நகரத்தின் அருகில் உள்ள இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் பெற்றவுடன் கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உயரமான ஏணி வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயானது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகாத நிலையில், தீயணைப்பு துறை இந்த விபத்து தொடர்பாக தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
