இந்த விடயம் நடந்தால் ஓய்வை அறிவிப்பேன்: திடீரென்று ரசிகர்களுக்கு தோனி உருக்கமான தகவல்!
ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 57ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியதுடன், டாஸ் வென்ற கேகேஆர் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கேகேஆர் அணியில், கேப்டன் அஜிங்கிய ரஹானே 48 (33) ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 38 (21) ரன்களையும் அடித்தார்கள்.
மணிஷ் பாண்டே கடைசிவரை களத்தில் இருந்து 36 (28) ரன்களை எடுத்தார். இதனால், கேகேஆர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 179/6 ரன்களை எடுத்தது.
நூர் அகமது தொடர்ந்து அபாரமாக பந்துவீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்த நிலையில், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தார்கள்.
தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில், ஓபனர்கள் ஆயுஷ் மாத்ரே மற்றும் டிவோன் கான்வே இருவரும் தலா இரண்டு பந்துகளை எதிர்கொண்டு, டக்அவுட் ஆனார்கள்.
அடுத்து, அஸ்வின் 8 (7), ரவீந்திர ஜடேஜா 19 (10), உர்வில் படேல் 31 (11) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிக்க, சிஎஸ்கே அணி 5.2 ஓவர்களிலேயே 60/5 என படுமோசமாக சொதப்பியது.
தொடர்ந்து டிவோல்ட் பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் 41 பந்துகளில் 67 ரன்களை குவித்தது. இறுதியில், பிரேவிஸ் 52 (25) மற்றும் ஷிவம் துபே 45 (40) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மகேந்திரசிங் தோனி 17 (18), அன்ஷுல் கம்போஜ் 4 (1) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், சிஎஸ்கே அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 183/8 ரன்களை எடுத்து, 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
வெற்றியைப் பெற்றப் பிறகு பேசிய மகேந்திரசிங் தோனி, ‘‘ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.
எது எனது கடைசி ஐபிஎல் சீசன் என்பது இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை. ஐபிஎலில் 2 மாதங்கள் மட்டும்தான் விளையாடுகிறேன். அடுத்து, 6 முதல் 8 மாதங்கள் வரை ஐபிஎலுக்காக தாயாராகும் பணியை செய்கிறேன்’’ எனக் கூறினார்.
‘‘அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை, ஐபிஎலுக்காக தயாராகும்போது, எனது உடல்நிலை அதனை ஏற்றுக்கொண்டால், நிச்சயம் அடுத்த சீசனில் விளையாடுவேன். ஓய்வுகுறித்து தற்போது, எதுவும் சொல்வதற்கு இல்லை’’ எனத் தெரிவித்தார்.