இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி நீக்கம்.. சிஎஸ்கே  வீரருக்கு இடம்.. பிசிசிஐ அதிரடி தீர்மானம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி நீக்கம்.. சிஎஸ்கே  வீரருக்கு இடம்.. பிசிசிஐ அதிரடி தீர்மானம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ  தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு முகமது ஷமியின் முழங்கால் இன்னும் தயாராகவில்லை என்றும், அவரால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என பிசிசிஐ மருத்துவக் குழு கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக வேறு சில வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய தேர்வு குழு தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

5 போட்டிகளிலும் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்றும், அவருடன் பந்துவீசுவதற்காக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதுடன், அவர்களுடன் ஹர்ஷித் ராணாவும் இடம் பெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்கும் என்பதால், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் காம்போஜை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கின்றது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் அன்ஷுல் காம்போஜ், முன்னதாக, கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தார். 

அவரது பந்துவீச்சு நம்பிக்கை இருப்பதால், அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெறுவார் என்றும், அவர் இந்தியா ஏ அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளார்.

அத்துடன், அதில் விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில், அவர் நிச்சயமாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடவும் வாய்ப்பு உள்ளதுடன், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், வேறு சில பேட்ஸ்மேன்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்படாது எனவும், சர்பராஸ் கான், சாய் சுதர்சன் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.