லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சோதனை அனுமதி: ஏற்பட்டுள்ள சர்ச்சை

சீனாவின் புதிய லண்டன் சூப்பர் தூதரகம் உருவாக்கப்பட உள்ள பகுதியின் உள்ளே இந்த பாரம்பரிய தளம் இருப்பதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அமைச்சுகளும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சோதனை அனுமதி: ஏற்பட்டுள்ள சர்ச்சை

லண்டனில் உள்ள பண்டைய வரலாற்று தளமான செயிண்ட் மேரி கிரேசஸ் அபே இடிபாடுகளில் சுற்றுலாப் பயணிகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் கடவுச்சீட்டுடன் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் புதிய லண்டன் சூப்பர் தூதரகம் உருவாக்கப்பட உள்ள பகுதியின் உள்ளே இந்த பாரம்பரிய தளம் இருப்பதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அமைச்சுகளும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1350 ஆம் ஆண்டு மன்னர் எட்வர்ட் III நிறுவிய இந்த வரலாற்றுச் சின்னத்தில் விமான நிலையத்தைப் போன்ற பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

சீனாவை விமர்சிப்பவர்களுக்கு இது ஆபத்தாக இருக்கக்கூடும் என்று Inter-Parliamentary Alliance on China (IPAC) நிர்வாக இயக்குநர் Luke de Pulford எச்சரித்துள்ளார்.

இந்த முடிவு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு சர் கெய்ர் ஸ்டார்மர் அதிகாரமேற்கொண்ட பிறகு தூதரகத் திட்டம் மீண்டும் வேகமடைந்தது குறிப்பிடத்தக்கது.