ஹர்திக் பாண்டிய சறுக்கியது எங்கு தெரியுமா? தோல்விக்கு காரணம் இதுதான்.. இனி ரோகித்?

போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. 

Mar 28, 2024 - 19:01
ஹர்திக் பாண்டிய சறுக்கியது எங்கு தெரியுமா? தோல்விக்கு காரணம் இதுதான்.. இனி ரோகித்?

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 

இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியடைய ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவுகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

முதல் 10 ஓவர்களில் ஐதராபாத் அணி 148 ரன்களை விளாசியது. இந்த 10 ஓவர்களில் பும்ரா வீசிய ஒரு ஓவரில் மட்டும் 5 ரன்கள் சேர்க்கப்பட்டன.

இதன்பின் கிளாசனை கட்டுப்படுத்த பும்ராவின் ஓவர்கள் தேவை என்ற திட்டத்துடன் மும்பை அணி செயல்பட்ட போதும், கிளாசன் வருவதற்கு முன்பாகவே ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் மும்பை அணியை பொளந்து கட்டி விட்டனர்.

சூழலுக்கு தகுந்தபடி சில முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயம் கேப்டனாக இருப்பவருக்கு உண்டு,  அப்படி எடுக்காத போது, ஆட்டம் கைகளை விட்டு போவதை யாராலும் தடுக்க முடியாது.

இதனால் முதல் ஓவரிலேயே பும்ராவிடம் பந்தை கொடுத்து ஹர்திக் பாண்டியா சோதனை செய்திருக்க வேண்டும் என்றும், பவர் பிளேவில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யும் திட்டத்துடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!