பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே... முதல் அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 

May 1, 2025 - 06:02
பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே... முதல் அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 

இதன் மூலம் வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ஷேக் ரசித் 11 ரன்களிலும், ஆயுசு மாத்ரே ஏழு ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

ஜடேஜா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி பவர் பிளே முடிவில் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இருந்து தடுமாறியது. நான்காவது விக்கெட் ஜோடி சேர்ந்த பிரெவிஸ் மற்றும் சாம் கரண் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 

குறிப்பாக ஷாம்கரன் 30 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் என விளாசிய சாம் கரண் 47 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். பிரவீஸ் 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

சாகல் கடைசி கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் ஆகியோர் அபாரமாக விளையாடி 4.4 ஓவர்களில் தான் 44 ரன்கள் சேர்த நிலையில், பிரியான்ஸ் ஆர்யா 23 ரன்களில் ஆட்டம் இழக்க, பிராப்சிம்ரன் சிங் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 

நெஹல் வதேரா ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க ஸ்ரேயாஸ் தனி ஆளாக நின்று  41 பந்துகளை எதிர்கொண்டு 72 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். 

ஷாசாங் 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்க்க பஞ்சாப் அணி இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி இரண்டாவது இடத்திற்கு சென்றது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!