இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்.. நீக்கப்படவுள்ள வீரர்... வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நடக்கவுள்ள அதிரடி மாற்றம்..  நீக்கப்படவுள்ள வீரர்... வெளியான தகவல்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு ஒன்று என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான அணியின் பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து அபிஷேக் நாயர் கருத்து தெரிவித்துள்ளார். பலரும் அடிலெய்ட் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அபிஷேக் நாயரின் கணிப்பின்படி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். இந்திய அணியில் உள்ள ஒரு வேகப்பந்துவீச்சாளர் நீக்கப்பட்டு அவருக்கு பதில் குல்திப் யாதவ் பயன்படுத்தப்படலாம்.

அடிலெய்ட் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் பந்து ஸ்விங் ஆனாலும், நாம் ஒரு வேகப்பந்து வீச்சாளரை குறைத்து விட்டுத் தான் விளையாட வேண்டும் என்று நாயர் வலியுறுத்தியுள்ளார். முதல் போட்டியில், அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருமே விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஸ்தீப் சிங் என்ற ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டும்தான் விக்கெட்டை எடுத்தார்.

குல்தீப் யாதவ் எவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றும், இந்திய அணியின் பலம் என்ன என்பது குறித்தும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என்று நாயர் தெரிவித்துள்ளார். அடிலெய்ட் ஆடுகளம் நிச்சயம் குல்தீப் யாதவுக்கு சாதகமாக இருக்கும்.

எனவே, இந்திய அணி பந்து வீசும் போது அவரை 15 ஆவது ஓவர் முதல் 35 வது ஓவர் வரை பயன்படுத்த வேண்டும் என்று அபிஷேக் நாயர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து விளையாட வேண்டும் என்றும், இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றிகரமான ஜோடியாகத் திகழ்ந்தனர் என்றும் நாயர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வருண் சக்கரவர்த்தி அணியில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன், கில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிக அளவு ஓவர்களை எதிர்கொண்டு போட்டியின் கடைசி வரை இருப்பார் எனவும் தாம் நினைப்பதாக அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.