அமெரிக்க விசா நிராகரிப்பு: மன அழுத்தத்தால் உயிரைவிட்ட ஆந்திர மருத்துவர்

ஆனால் அவரது விண்ணப்பம் ஏற்கப்படாததால், இது அவருக்கு பெரிய ஏமாற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விசா நிராகரிப்பு: மன அழுத்தத்தால் உயிரைவிட்ட ஆந்திர மருத்துவர்

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர் ரோகிணி, அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பணி விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். 

ஆனால் அவரது விண்ணப்பம் ஏற்கப்படாததால், இது அவருக்கு பெரிய ஏமாற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விசா தொடர்பான நீண்டகால பதட்டத்தால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். இந்த மன அழுத்தத்தைப் பற்றி அவர் ஒரு கடிதத்திலும் குறிப்பிட்டிருந்ததாக அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.