இந்திய அணிக்கு திரும்பும் அதிரடி வேக பந்துவீச்சாளர்.. கம்பீரின் மாஸ்டர் பிளான் இதுதான்... திடீர் முடிவு!
இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஒரு மாத இடைவெளிக்கு பின் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளதுடன், அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது.
இந்த நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இம்முறை ஆசிய கோப்பை போட்டி டி20 தொடராக நடத்தப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் வாய்ப்பை பெறாத ஆர்ஸ்தீப் சிங் ஆசிய கோப்பை தொடரில் முக்கிய பங்காற்றுவார் என தெரிகிறது.
அத்துடன், டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இளம் வீரர் மாயங் யாதவை இந்திய அணியில் சேர்க்க கம்பீர் முடிவெடுத்ததாக தெரிகிறது. மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் மாயங், ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி இருக்கிறார்.
பும்ராவை போல் மாயங் யாதவை மாற்ற கம்பீர் நடவடிக்கை எடுத்து வருவதுடன், ஆசிய கோப்பை தொடரில் அவரை விளையாட வைக்க கம்பீர் முயற்சி செய்தார். எனினும், ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையில் மாயங் யாதவ்க்கு மீண்டும் காயம் ஏற்பட்டது.
இதனால், அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வர ஆறு மாதத்தில் இருந்து எட்டு மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகின்றது.