விராட் கோலி விலகல்... டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன்?
விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி எதிர்பாராத விதமாக முதல் இரண்டு போட்டிகளில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.
மாற்று வீரரை இன்னும் பிசிசிஐ அறிவிக்காத நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய சாய் சுதர்ஷன், இந்திய ஒருநாள் அணியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
இந்த நிலையில், விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 வருடங்களில் இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணியில் மிகப் பெரிய ரிஸ்க்... சிக்கலில் ரோஹித்!
அத்துடன், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்டிங் சராசரி வைத்துள்ள சர்ஃபராஸ் கான் மற்றும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கும் ரஜத் படிதார் ஆகியோரை அணியில் சேர்க்கக்கூடும் என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தமிழக வீரர் சாய் சுதர்ஷனின் ஒருநாள் போட்டி ஆட்டம் மற்றும் இந்தியா ஏ அணியில் ஆடிய ஆட்டங்களை சுட்டிக் காட்டி உள்ளார்.
இந்த கருத்து தற்போது பேசப்பட்டு வருவதுடன், இங்கிலாந்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு இடம் கிடைக்குமா என்ற பேச்சு எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |