நியூயார்க் புதிய மேயர் மம்தானியை புகழ்ந்த டிரம்ப்: வெள்ளை மாளிகை சந்திப்பில் திடீர் திருப்பம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோரான் மம்தானியை சந்தித்து, அவரைப் பாராட்டியுள்ளார்.

அரசியல் ரீதியில் பல முறை மோதிக் கொண்ட இருவரும் நவம்பர் 21 அன்று வெள்ளை மாளிகையில் நேரடியாக கலந்துரையாடினர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த உரையாடல் “மிகவும் பயனுள்ளதும் ஆக்கப்பூர்வமானதும்” எனக் குறிப்பிட்டார். நியூயார்க் நகரத்தின் வளர்ச்சி குறித்த பல அம்சங்களில் இருவருக்கும் ஒரே கருத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

“மம்தானி சிறப்பாகச் செயல்பட்டால் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

34 வயதான மம்தானி ஜனவரி 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மேயர் பொறுப்பை ஏற்கிறார். இதற்கு முன் 79 வயதான டிரம்ப், மம்தானியைப் பற்றி கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் இச்சந்திப்பு இருவருக்குமான உறவை சமநிலைக்கு கொண்டு வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உகாண்டாவில் பிறந்த மம்தானியின் தந்தை மஹ்மூத் மம்தானி ஒரு விரிவுரையாளர்; அவரது தாய் மீரா நாயர் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஆவார்.