முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த வீரர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி, ஐபிஎல் தொடர் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமாரின் சாதனையை டிரென்ட் போல்ட் சமன்செய்துள்ளார்.
அதன்படி புவனேஷ்வர் குமார் இதுவரை 25 விக்கெட்டுகளை முதல் ஓவரிலியே கைப்பற்றியுள்ள நிலையில், டிரென்ட் போல்ட்டும் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அத்துடன், அதிவேகமாக இச்சாதனையை படைத்த வீரர் வரிசையில் போல்ட் 80 இன்னிங்ஸில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 116 இன்னிங்ஸில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |