டிஎன்பிஎல் 2025 வெற்றியுடன் தொடங்கியது திண்டுக்கல்.. சிவம் சிங் அதிரடி.. அஸ்வின் அபாரம்!
டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கோவையில் நடந்த இந்த டி20 போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரன்னர் அப் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி பலப் பரீசை நடத்தியது.
 
                                டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கோவையில் நடந்த இந்த டி20 போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரன்னர் அப் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி பலப் பரீசை நடத்தியது.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியில் விஷால் வைத்தியா 6 ரன்களிலும், சுரேஷ் லோகேஸ்வர் 15 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
சி எஸ் கே அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஆண்டிரே சித்தார்த் பெரியதாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 23 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
மறுபுறம் ஷாருக்கான் 14 பந்துகளில் 25 ரன்களில் ஆட்டம் இழக்க பாலசுப்ரமணியம் சச்சின் 38 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இறுதியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, லைக்கா கோவை கிங்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
 
சந்தீப் வாரியர், அஸ்வின் மற்றும் கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இதை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி அஸ்வின், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 13 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.
மற்றொரு தொடக்க வீரரான சிவம் சிங் விக்கெட்டை வீழ்த்த கோவை வீரர்கள் கடுமையாக போராடினாலும், எந்த பயனும் அளிக்கவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்த சிவம் சிங் தொடர்ந்து அதிரடி காட்டி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 49 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார்.
விமல் குமார் 28 ரன்கள் எடுக்க, ஹண்ணி சைனி நான்கு பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். பாபா இந்தரஞ்சித் 13 ரன்கள் எடுத்து களத்தில் நிற்க திண்டுக்கல் அணி 17.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கோவை தரப்பில் ஷாருக்கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்தினார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






