இந்த பந்துவீச்சு வேலைக்கு ஆகாது.. தென்னாப்பிரிக்காவிடம் அடிவாங்குமா இந்தியா?
தென்னாப்பிரிக்க வீரர்கள் தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதுடன், 300 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ள இந்திய அணி 3 டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில், எந்த ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளரும் இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னமைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாப்பிரிக்க வீரர்கள் தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதுடன், 300 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனுபவம் இல்லாத வேகபந்துவீச்சாளர்களை இந்திய தேர்வு குழுவினர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக களம் இறக்குவமால், இதனால் நிச்சயம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர்.
அணியில் முகேஷ் குமார்,ஆவேஷ் கான்,தீபக் சாஹர், ஆர்ஸ்தீப் சிங் என 4 வீரர்கள் உள்ளதுடன், இந்த நான்கு பேருமே சிக்ஸர் அடிப்பதற்கு ஏதுவாக பந்துவீசுவார்கள். இதில் முகேஷ் குமார், ஆவேஷ்கான் ஆகியோர் வேகமாக பந்து வீசினாலும் அவர்களது ஓவரில் ரன்கள் அதிகமாக செல்லும்.
இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் முஹம்மது சிராஜ், தீபக்சாகர் ஆகியோர் இருக்கிறார்கள். அதிலும் முகேஷ் குமார் போன்ற அனுபவம் குன்றிய வீரர்கள் இருக்கிறார்கள். இது சிராஜ் ஓரளவுக்கு அணியை காப்பாற்றுவார் என நம்பப் பட்டாலும் இந்த பவுலிங் குழுவை பார்த்தால் ரசிகர்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
எத்தனையோ வேகப்பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவர்களை ஒருநாள் அணியில் பயன்படுத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுவது தேர்வுக்குழு காதில் என்ன விழவா போகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |