90ஸ் கிட்ஸ்கள் கனவு நிறைவேறுமா? 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் பல பரிட்சை நடத்துகின்றன.
 
                                20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் பல பரிட்சை நடத்துகின்றன.
நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இந்திய அணி நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றதுடன், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறி இருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் மோதுகின்றனர்.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், இது 90ஸ் கிட்ஸ் களின் மனதில் நீங்காத வடுவாக இன்றுமே உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா மீண்டும் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகவே பார்க்கப்படுகின்றது.
 
சுழற்பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சம் தடுமாறுகிறார்கள் என்பதால், இந்திய அணி தங்களுடைய சுழற் பந்துவீச்சை பலப்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்திய அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் நல்ல பார்மில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி இரண்டிலும் நல்ல பார்மில் இருந்தாலும், சில நேரத்தில் தடுமாறுவதை காணமுடிகின்றது.
ஆஸ்திரேலிய அணி முன்பு போல் அசுரத்தனமான அணியாக இல்லை என்றாலும் இன்றும் அவர்கள் ஒரு சாம்பியன் அணியாகவே உள்ளதால் அவர் வீழ்த்துவது என்பது எளிதல்ல.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தோல்விக்கு பழித்தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இதனை இந்தியா பயன்படுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






