இவர் தான் இந்தியாவின் அடுத்த ரெய்னா.. ரிங்கு சிங்குக்கு டிராவிட் கொடுத்த பொறுப்பு!
ரிஷப் பண்ட், பினிஷர் ஆக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒன்று இரண்டு போட்டிகளைத் தவிர பெரிய அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஒரு ஃபினிஷர் இல்லாததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் விளையாடவில்லை.
அவரை பினிஷராக கொண்டுவரப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை.
ரிஷப் பண்ட், பினிஷர் ஆக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒன்று இரண்டு போட்டிகளைத் தவிர பெரிய அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை.
இந்த நிலையில் ரெய்னாவின் ஜெராக்ஸ் போல் ஒரு வீரரை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. ரிங்கு சிங் தான் அந்த வீரர். இதுவரை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 4 இன்னிங்ஸில் இரண்டு முறை கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
இதனால் ரிங்கு சிங்கை முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா தொடரில் சேர்த்திருக்கிறது. மேலும் இறுதியில் களமிறங்க வாய்ப்பு தரப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ரெய்னா விளையாடிய காலத்தில் எந்த இடத்தில் களமிறங்கினாரோ அதே இடம் தற்போது ரிங்கு சிங்கிற்கு கிடைத்திருக்கிறது.
ஹர்திக் பாண்டியா ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாத நிலையில் ரிங்கு சிங் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அவர் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொள்வார்.
ஒருவேளை அவர் சோபிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கி அவரை அந்த இடத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்பதுதான் ராகுல் டிராவிட்டின் திட்டமாக உள்ளதாம்.