கேப்டன் பதவியை விட மாட்டேன்.. ஆதரவை திரட்டி பாபர் அசாம் ரகசிய திட்டம்!
தமது இறுதி லீக் போட்டி முடிந்த உடன் பேசிய பாபர் அசாம், தான் அணியை தொடர்ந்து வழிநடத்த தயாராக இருப்பதாகவும், அணியை மறு சீரமைக்க உதவ தயாராக இருப்பதாக கூறியதுடன், அதன் மூலம் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் பெற்ற தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகுவர் என தகவல்வெளியான நிலையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளில் ஆடியதுடன் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.
இதனையடுத்து, கேப்டன் பாபர் அசாமின் தலைமையும் சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலர் கூறியதுடன், கேப்டன் பதவியில் இருநது விலகி, பாபர் அசாம் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, பாபர் அசாம் ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், தமது இறுதி லீக் போட்டி முடிந்த உடன் பேசிய பாபர் அசாம், தான் அணியை தொடர்ந்து வழிநடத்த தயாராக இருப்பதாகவும், அணியை மறு சீரமைக்க உதவ தயாராக இருப்பதாக கூறியதுடன், அதன் மூலம் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின் ரகிசய திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவருமான ரமிஸ் ராஜாவை சந்தித்து கேப்டன்சியை பற்றி பாபர் அசாம் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ரகசியமான முறையில் சக வீரர்களிடம் தனக்கு ஆதரவு கேட்டு உள்ளாராம்.
இதன்போது, வீரர்கள் பலரும் பாபர் அசாம் கேப்டன் பதவியில் தொடர ஆதரவு அளித்து இருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |