அரையிறுதிக்கு கூட போகாத பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய ஐசிசி... பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு கூட செல்லாத அணிகளுக்கும் ஐசிசி பரிசு தொகையை தற்போது வாரி வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

அரையிறுதிக்கு கூட போகாத பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய ஐசிசி... பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு கூட செல்லாத அணிகளுக்கும் ஐசிசி பரிசு தொகையை தற்போது வாரி வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான அணிக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும், அதாவது ஒரு போட்டியில் வென்றால் 35 லட்சம் லட்சம் மற்றும் அரை இறுதிக்கு செல்லாமல் வெளியேறினால் 80 லட்சம் என அனைத்து அணிகளுக்குமே பரிசு தொகையை ஐசிசி அறிவித்திருக்கிறது.

அதன்படி இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு செல்லாமல் வெளியேறியதால் அவர்களுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பு பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ளது. 

இந்த தொடரில் மூன்று வெற்றிகளை பெற்று அரை இறுதிக்கு செல்லாமல் வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று புள்ளி பட்டியலில் கடைசி மூன்று இடத்தை பிடித்துள்ள  பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை கிடைக்கப்போகிறது.

வெற்றி பெற்றதற்கு ஒரு பரிசு கிடைத்தாலும் அரை இறுதி வெளியேறிய அணிக்கு எதற்கு தனியாக 80 லட்சம் பரிசு என்று ஐசிசி யின் இந்த முடிவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...