டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணி போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. இடது கை பேட்ஸ்மேன் மட்டும் வாய்ப்பு?

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி எடுத்துக்கொண்டால், ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணி போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. இடது கை பேட்ஸ்மேன் மட்டும் வாய்ப்பு?

நடந்து முடிந்த ஒருநாள் உலக்கிண்ண கோப்பையை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணி, 2024 ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

அண்மைகாலமாக ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் பலமான அணியாக இருந்து வரும் இந்தியாவுக்கு டி20 அணியைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில், டி20 அணியில் மாற்றத்தை ஏற்படும்த மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இணைத்து வருகின்றது. அதிலும்,  இடது கை பேட்ஸ்மேன்கள் தேவை என, இடது கை பேட்ஸ்மேன்களை டி20 அணியில் பார்த்து பார்த்து தேர்வு செய்து வைத்துள்ளனர்.

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி எடுத்துக்கொண்டால், ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், மூன்றாம் வரிசையில் இஷான் கிஷன், ஐந்தாம் வரிசையில் திலக் வர்மா, ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் ரிங்கு சிங் மற்றும் அக்சர் பட்டேல் என ஐந்து பேரும் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவர்.

இது வலது கை வேகப் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் செய்து போட்டியில் வெற்றி பெறும் உத்தி என பார்க்கப்படுகின்றது.

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை வேகப் பந்துவீச்சாளர்கள் டி20 போட்டிகளில் வீசும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை கண்டுபிடித்த ஐபிஎல் அணிகள்,  அதை கடந்த சில தொடர்களில் செயல்படுத்தி வெற்றிப் பெற்று வருகின்றன.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வந்தே ஆக வேண்டும்... மிரட்டும் பாகிஸ்தான்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் நான்கு இடது கை பேட்ஸ்மேன்களை பயன்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை கவனத்தில் கொண்டே பிசிசிஐ இந்த திட்டத்தை செயல்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, டி20 உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்து அழைத்து செல்லக் கூடிய சூழலில் ஒரே நேரத்தில் இடது கை வேகப் பந்து, வலது கை வேகப் பந்து, வலது கை ஆஃப் ஸ்பின்னர் என அதிக இடத்தை பந்துவீச்சாளர்களுக்கே கொடுக்க முடியாத நிலை காணப்படும்.

இதனாலேயே, இடது கை பேட்ஸ்மேன்களோடு விளையாடினால், அதற்கு ஈடாக அணியை பல அணிகளால் தேர்வு செய்ய முடியாது என்பதால், பிசிசிஐ இந்த மாஸ்டர் பிளானை போட்டுள்ளதாக தெரிகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...