கோலி வைத்த ட்விஸ்ட்... முதல் இடத்தில் யார்?  மெகா சாதனை படைத்த ரோஹித் சர்மா

அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் இருந்தாலும்,  உலகக்கோப்பை வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கோலி வைத்த ட்விஸ்ட்... முதல் இடத்தில் யார்?  மெகா சாதனை படைத்த ரோஹித் சர்மா

2023 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் லீக் சுற்றின் முடிவில் விராட் கோலி 3 ரன்கள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளார்.

அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் இருந்தாலும்,  உலகக்கோப்பை வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே என்பதுடன், அவர் 2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து 648 ரன்கள் குவித்து இருந்தார். 

தற்போது 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் இதுவரை நடந்த ஒன்பது லீக் சுற்றுப் போட்டிகளில் ஆடி 503 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 1996 உலகக்கோப்பை மற்றும் 2003 உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கும் மேல் எடுத்து இருந்தார். 

ஆனால், இடையே 1999 உலகக்கோப்பை தொடரில் அவரால் 500 ரன்களுக்கு மேல் ரன் குவிக்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கருக்கு பின் இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரரும் ரோஹித் சர்மா மட்டுமே.

அதிக ரன்கள் அடித்த ஐந்து வீரர்கள் பட்டியல் 

  1. விராட் கோலி (594 ரன்கள்)
  2. க்விண்டன் டி காக் (591 ரன்கள்)
  3. ரச்சின் ரவீந்திரா (565 ரன்கள்)
  4. ரோஹித் சர்மா (503 ரன்கள்)
  5. டேவிட் வார்னர் (499 ரன்கள்)

இதேவேளை, இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 421 ரன்கள் அடித்து எட்டாவது இடத்திலும், கே எல் ராகுல் 347 ரன்கள் அடித்து 18ஆவது இடத்தில் இருப்பதுடன், சுப்மன் கில் 270 ரன்கள் எடுத்து 34வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...