சென்னை அணிக்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னா? தோனியுடன் அவசர சந்திப்பு.. என்ன நடந்தது?

ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். 

சென்னை அணிக்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னா? தோனியுடன் அவசர சந்திப்பு.. என்ன நடந்தது?

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவிக்க வரும் நவம்பர் 26 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில் கடந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கவில்லை. அது மட்டும் அல்லாமல் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. 

இதற்கு காரணம் ரெய்னா கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி விட்டார் என்பதுதான். இந்த நிலையில் ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். 

இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் அவருடைய மனைவி ஷாக்சி ஆகியோருடன் ரெய்னா புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவின் புதிய டி20 கேப்டன் ஹர்திக் இல்லை.... ரோஹித், கோலி கட்டாயம்... கம்பீர் பரிந்துரை!

தோனிக்கும் ரெய்னாவுக்கும் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் தான் ரெய்னாவை சிஎஸ்கே அணியில் தோனி எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் மினி ஏலத்திற்கு முன்பாக தோனியை ரெய்னா சந்தித்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தற்போது ரெய்னாவுக்கு 36 வயது தான் ஆகிறது. அவரால் இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் திரும்பி வருவதற்கான முயற்சியில் ரெய்னா தோனியை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவேளை வீரராக இல்லை என்றாலும் பயிற்சியாளராக கூட திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ரெய்னா, தோனியை சந்தித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...