அதிக ரன் குவிப்பு.. அத்துடன் மற்றுமொரு சாதனையை சேர்த்து செய்த சன் ரைசர்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில், ஆர்சிபிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்தது.

அதிக ரன் குவிப்பு.. அத்துடன் மற்றுமொரு சாதனையை சேர்த்து செய்த சன் ரைசர்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில், ஆர்சிபிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்தது.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அப்போது பேசிய சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் 240+ ரன்களை அடிப்போம் எனக் கூறினார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், ஓபனர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இதனால், பவர் பிளேவிலியே அந்த அணி 76 ரன்களை குவித்தது.

டிராவிஸ் ஹெட் அதிரடி காட்ட, அபிஷேக் சர்மா 34 (22) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து, ஹெட் உடன் கிளாசின் இணைய, இவர்களது அதிரடியை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 102 ரன்களை குவித்தார். கிளாசனும் 31 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட 67 ரன்களை குவித்தார். இவர்களது அதிரடி காரணமாக, சன் ரைசர்ஸ் அணி 12 ஓவர்களிலேயே 150 ரன்களை குவித்தது.

இறுதியில் எய்டன் மார்க்கரம் 17 பந்துகளில் 32 ரன்களை அடிக்க, அப்துல் சமாத்தும் 10 பந்துகளில் 37 ரன்களை குவித்து அசத்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 287/3 ரன்களை குவித்து வரலாறு படைத்தது.

இதயைடுத்து, 287 ரன்களை குவித்த முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை படைத்த சன் ரைசர்ஸ் அணி, ஐபிஎலில் ஒரு இன்னிங்ஸில் 22 சிக்ஸர்களை அடித்த அணி என்ற சாதனையும் படைத்துள்ளது. 

இதற்குமுன், 2013-ல் புனே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 21 சிக்ஸர்களை அடித்ததுதான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...