விராட் கோலியை அனுப்பி விட்டு.. ரோகித் சர்மாவ கேப்டன் ஆக்கியது இதுக்காகத்தான்... கங்குலி அதிரடி பேச்சு!
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, புதிய கேப்டனாக ரோகித் சர்மா வந்த காலகட்டம் பெரிய சூறாவளியை உருவாக்கியது.
 
                                இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, புதிய கேப்டனாக ரோகித் சர்மா வந்த காலகட்டம் பெரிய சூறாவளியை உருவாக்கியது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதற்கு பின்னால், அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி உள்ளதாகவே பலரும் பேசினார்கள்.
இந்த நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து 2021ஆம் ஆண்டு விராட் கோலி தாமாக விலகினார்.
இதற்கு அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திலும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது.
பிறகு விராட் கோலி அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக இருந்து, அந்தத் தொடரை தோற்றதோடு, டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக விலகிக் கொண்டார்.
 
இதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவத்திற்கும் ரோகித் சர்மா கேப்டனாக வந்தார். ஆனால் இதற்கு நடுவில் பலர் தற்காலிகமாக இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்.
மேலும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு கேப்டனாக இருக்க, ஒரு வருடத்திற்கும் மேலாக ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்திருக்கிறார்.
நட்சத்திர வீரர் அஸ்வின் கூட செய்யாத சாதனையை எட்டிப் பிடித்த இளம் வீரர்
இந்த நிலையில் கங்குலி கூறுகையில் “ரோகித் சர்மா உலக கோப்பையில் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்திய விதத்தை பாருங்கள். இறுதிப்போட்டியில் தோல்வியடையும் வரை அந்த உலகக் கோப்பையில் இந்திய அணியே சிறந்த அணியாக இருந்தது. 
அதனால்தான் அவர் ஒரு சிறந்த கேப்டன். ஐபிஎல் தொடரிலும் அவர் ஐந்து கோப்பைகளை வென்று இருக்கிறார். எனக்கு இது ஆச்சரியமாக இல்லை. நான் தலைவராக இருந்த பொழுதுதான் அவர் கேப்டனாக கொண்டுவரப்பட்டார். 
அவர் அணியை வழிநடத்திய விதத்திலும் எனக்கு ஆச்சரியம் இல்லை. அவரிடமிருந்து திறமையைப் பார்த்துதான் அவரை கேப்டன் ஆக்கினேன். அவர் சிறப்பாக செய்துவிட்டார்” என்று சொல்லி இருக்கின்றார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






