ஷுப்மன் கில் வீக்னஸ் இதுதான்! – இத மட்டும் சரி செய்தால் யாராலும் அசைக்க முடியாது! தெரியுமா?
ஷுப்மன் கில்லின் இயல்பான ஆட்டம் – பவர் பிளேவில் நிதானமாக இருந்து, பின்னர் அதிரடியாக ரன்களை குவிப்பது. ஆனால், சமீப காலமாக இந்த நிதானத்தை விட்டுவிட்டு, முதல் ஓவரிலேயே அதிரடி பந்துகளை ஆட முயன்று வருகிறார்.
இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஷுப்மன் கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. துணைக் கேப்டனாக 15 இன்னிங்ஸ்களில் சராசரி 19.40, ஸ்ட்ரைக் ரேட் 137.3 என மிகவும் சராசரி ஆட்டத்தைதான் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, சஞ்சு சாம்சனை மாற்றாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், காயம் காரணமாக ஷுப்மன் கில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மன் கில்லின் இயல்பான ஆட்டம் – பவர் பிளேவில் நிதானமாக இருந்து, பின்னர் அதிரடியாக ரன்களை குவிப்பது. ஆனால், சமீப காலமாக இந்த நிதானத்தை விட்டுவிட்டு, முதல் ஓவரிலேயே அதிரடி பந்துகளை ஆட முயன்று வருகிறார். இதுவே அவரது தொடர் சொதப்பலுக்கு மூலக்காரணமாக கருதப்படுகிறது.
கில்லின் உண்மையான பலம் – லெக் சைடு மற்றும் ஆஃப் சைடு திசைகளில் கவனமாக உள்ள பீல்டர்களை தவிர்த்து, கோணங்களை பயன்படுத்தி பவுண்டரிகளை அடிப்பதில் இருக்கிறது. ஆனால், ஸ்ட்ரைட் திசையில் அவருக்கு தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. கால்களை சரியாக நகர்த்தி ஷாட்களை ஆட முடியாமல், தொடர்ச்சியாக மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைகளில் கேட்ச் ஆகிக் கொண்டிருக்கிறார். இதுவே அவரது பெரிய பலவீனம்.
ஐபிஎல் 2025இல், சாய் சுதர்ஷனுடன் இணைந்து நிதானமாக தொடங்கி, பின்னர் ரன்களை குவித்த அவர், இந்திய அணியில் மட்டும் இந்த ஆட்டத்திலிருந்து விலகி, அதிக அவசரத்துடன் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறார். இதுவே அவரது தோல்விக்கு காரணமாக உள்ளது.
இப்போது, சஞ்சு சாம்சனுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடைசி டி20 போட்டியில் ஓபனராக விளையாட அவருக்கு வாய்ப்பு உள்ளது. அந்த ஒரு வாய்ப்பில், சாம்சன் அரைசதம் அடித்தால், ஷுப்மன் கில்லுக்கு அடுத்து இந்திய அணியில் இடம் பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.
கடைசி போட்டியில் சாம்சன் சொதப்பினாலும், ஜனவரி நடுப்பகுதியில் தொடங்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 5 டி20 தொடரில் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த தொடரில் சாம்சன் எப்படி செயல்படுகிறார் என்பதை வைத்துதான், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டரை தீர்மானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
