சோலி முடிஞ்சது... இனி வாய்பே இல்ல... புஜாராவுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. என்ன நடந்தது?

சுமார் 10 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய புஜாரா, ராகுல் டிராவிட்டுக்கு பின் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிதான ஆட்டம் ஆடுவதில் வல்லவராக காணப்பட்டார்.

சோலி முடிஞ்சது... இனி வாய்பே இல்ல... புஜாராவுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. என்ன நடந்தது?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தால், புஜாராவுக்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

சுமார் 10 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய புஜாரா, ராகுல் டிராவிட்டுக்கு பின் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிதான ஆட்டம் ஆடுவதில் வல்லவராக காணப்பட்டார்.

ஆனால், அவரது நிதான ஆட்டத்தை இந்திய அணி நிர்வாகம்  விரும்பாத நிலையில், 2021 முதல் 2022 வரையில் அவரது பேட்டிங் ஃபார்ம் சராசரியாக இருந்ததால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.

அவருக்கு பதில் சுப்மன் கில், டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டதுடன், ஒரு சில போட்டிகளில் அரைசதம், சதம் அடித்த சுப்மன் கில், அதன் பின் தொடர்ந்து குறைந்த ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றார்.

நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை... இந்திய அணி செய்த வரலாற்று சம்பவம்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் அரைசதம் அடிக்க முடியாமல் திணறிய சுப்மன் கில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியதுடன், இது அவரது மூன்றாவது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது சதம் அடித்த பின் 13 இன்னிங்ஸ் வரை சதம் அடிக்காமல் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று வந்த சுப்மன் கில் தற்போது சதம் அடித்துள்ள நிலையில் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையே உள்ளது.

சுப்மன் கில்லுக்கு பதிலாக புஜாரா வாய்ப்பு பெறுவார் என இருந்த எதிர்பார்ப்பு இப்போது காணமல் போயுள்ளது. அத்துடன், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் புஜாராவை அணியில் தேர்வு செய்யக் கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

இதனால், புஜாராவுக்கு இந்திய அணியில் வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp