இளம் வீரர்களை வைத்துகொண்டு... இரண்டு விடயங்களில் சொதப்பி விட்டோம்! இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வேதனை!

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அத்துடன், இளம் வீரர்களை கொண்டுள்ளோம். அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இளம் வீரர்களை வைத்துகொண்டு... இரண்டு விடயங்களில் சொதப்பி விட்டோம்! இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வேதனை!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்சில் 371 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்த நிலையில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபரா வெற்றி பெற்றுள்ளதுஃ

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், "இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக எங்களுக்கு இருந்தது. வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை. 

எனவே, இந்த இரண்டு விஷயங்களால் நாங்கள் போட்டியை இழந்து விட்டோம். அத்துடன், இங்கிலாந்து அணிக்கு 430 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், வெறும் 25 ரன்களில் கடைசி சில விக்கெட்டுகளை இழந்து விட்டோம். 

கடைசி நாளில் கூட எங்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும். 

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அத்துடன், இளம் வீரர்களை கொண்டுள்ளோம். அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்றைய நாளில் பந்து பழையதாக மாறியவுடன் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. எனவே, பந்து பழையதாக மாறிய பிறகும் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

ஜடேஜா நன்றாகத் பந்து வீசினார். பும்ரா எந்தெந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை." என்றார்.