டி20 வரலாற்றிலேயே ரோஹித் சர்மா படைத்த மாபெரும் சாதனை...மெகா மைல்கல்!

டி20 வரலாற்றிலேயே ரோஹித் சர்மா படைத்த மாபெரும் சாதனை...மெகா மைல்கல்!

சர்வதேச டி20 போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ரோஹித் சர்மா தன் நூறாவது சர்வதேச டி20 போட்டி வெற்றியை சந்தித்தார். ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது.

இந்திய அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி இருந்தார். ஆனாலும், கேப்டனாக 40வது சர்வதேச டி20 வெற்றியை பெற்றுத் தந்தார் ரோஹித்.

அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர்கள் வரிசையிலும் ரோஹித் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். இந்த ஆப்கானிஸ்தான் போட்டி அவரது 149வது சர்வதேச டி20 போட்டி.

ரோஹித் சர்மா பங்கேற்ற 149 டி20 போட்டிகளில் இந்திய அணி 100 வெற்றிகளை பெற்றுள்ளது.

ரோஹித்துக்கு அடுத்து சோயப் மாலிக் (பாகிஸ்தான்) - 86 வெற்றிகள், விராட் கோலி (இந்தியா) - 73 வெற்றிகள், முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) - 70 வெற்றிகள், முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 70 வெற்றிகள் மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 68 வெற்றிகள், பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 66 வெற்றிகள் பெற்று உள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...