மதிக்காத இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு இனி வாய்ப்பே கொடுக்க மாட்டோம்... ரோஹித் அதிரடி

இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்

மதிக்காத இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு இனி வாய்ப்பே கொடுக்க மாட்டோம்... ரோஹித் அதிரடி

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியை இழந்த இந்திய அணி, அடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

அத்துடன், தொடர்ச்சியாக 17ஆவது உள்நாட்டு டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

நான்காவது போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கவலைக்கிடத்தில் இருந்தபோது, 84/0 என்பதில் இருந்து, 120/5 என ஸ்கோர் மாறியதால், இந்தியா தோற்கும் நிலை ஏற்பட்டது. 

அப்போதுதான், ஷுப்மன் கில், துரூவ் ஜோரல் பார்ட்னர்ஷிப்பால் இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றது. நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு பேட்டிகொடுத்த ரோஹித் சர்மா, ''டெஸ்ட் விளையாட ஆர்வம் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே, அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கும். விருப்பம் இல்லாதவர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு கொடுக்க மாட்டோம்'' என அதிரடியாக பேசினார்.

ரோஹித் சர்மாவின் இந்த பேட்டி, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு தான் எனக் கருதப்படுகிறது. இந்த இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்

இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் ரஞ்சிக் கோப்பையில் ஆட வேண்டும் என ராகுல் டிராவிட், வெளிப்படையாகவே பேசியிருந்தார். ஆனால், இருவரும் அதனை ஏற்க மறுத்து, மும்பையில் ஐபிஎல் பயிற்சி ஆட்டங்களில் விளையாடினார்கள்.

பிசிசிஐ உத்தரவிட்டும் அதனை மதிக்காமல் கிஷன், ஷ்ரேயஸ் இருவரும் ரஞ்சிக் கோப்பையை புறக்கணித்தது, பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இருவரையும் இனி சேர்க்க கூடாது என்ற முடிவில் நிர்வாகிகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், இந்திய அணிக்கு ஆட முடியாது. மேலும், ஐபிஎல் ஏலத்திலும் கலந்துகொள்ளாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவும் பிசிசிஐ தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...