டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை! விவரம் இதோ!

115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி விராட் கோலி 11வது இடத்தில் இருக்கிறார்.  92 போட்டிகளில் ஆடி ஹர்திக் பாண்டியா 30வது இடத்தில் இருக்கிறார். 

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை! விவரம் இதோ!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகப் பெரும் சாதனையை படைக்க இருக்கிறார். 

அதாவது, இதுவரை அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ள  ரோஹித் சர்மா, மேலும் ஒரு மைல்கல் சாதனை படைக்க இருக்கிறார்.

கடந்த 2௦௦7ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வரும் ரோஹித் சர்மா, 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் விளையாடி இருந்தார்.

அப்போது மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த ரோஹித் சுமார் 18 ஆண்டுகளாக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வரும்வதுடன் இதுவரை 149 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ரோஹித் சர்மாவின் 150வது சர்வதேச டி20 போட்டி ஆகும். இது மிகப் பெரிய மைல்கல் சாதனை ஆகும். 

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ரோஹித் சர்மா (149 ), அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் (134), டாக்ரேல் (128), பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் (124), நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் (122) ஆகியோர் உள்ளனர்.

115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி விராட் கோலி 11வது இடத்தில் இருக்கிறார்.  92 போட்டிகளில் ஆடி ஹர்திக் பாண்டியா 30வது இடத்தில் இருக்கிறார். 

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இவர்கள் மூவரும் பங்கேற்பார்கள் என்பதால் டி20 போட்டி எண்ணிக்கை மேலும் உயரும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...