2ஆவது போட்டியிலும் டக் அவுட்... ரோகித் சர்மா மோசமான சாதனை... கடுப்பான ரசிகர்கள்!
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி போட்டியில் முதல் பந்திலேயே ரோகித் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி விளையாடப் போகும் கடைசி தொடர் இது என்பதால் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி உள்ளனர்.
14 மாதங்களுக்கு பிறகு திரும்பி உள்ள ரோகித் சர்மா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது சரிதான் என்பதற்கு ஏற்றவாறு ரோகித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி உள்ளார்.
கில் சரியாக விளையாட மாட்டார் என, அவருக்கு பதில் களம் இறங்கிய ரோகித் சர்மா சரியாக விளையாடாமல் இருப்பது அவர் மீதான நெருக்கடியை அதிகப்படுத்தி உள்ளது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா தன்வசமாக்கியுள்ளார்.
ரோஹித் சர்மா இதுவரை 12 முறை டக் அவுட் ஆகியதுடன், கேஎல் ராகுல் ஐந்து முறையும், விராட் கோலி,ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 4 முறையும் டக் அவுட்டாகி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |