4ஆவது டெஸ்ட் போட்டியில் மழை பெய்யும்.. வெளியான பிட்ச் ரிப்போர்ட்... அதிர்ச்சியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள்!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
 
                                இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
1932ஆம் ஆண்டு முதல் இரு அணிகளுக்கு இடையில் 143 டெஸ்ட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில், 51 டெஸ்டில் இங்கிலாந்தும், 33 டெஸ்டில் இந்தியாவும் வென்றதுடன், 50 டெஸ்ட் சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளன.
இந்தியாவில் இரு அணிகளும் 57 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இந்தியா 24 டெஸ்ட்களிலும், இங்கிலாந்து அணி 15 டெஸ்ட்களிலும் வென்றுள்ளது. 28 டெஸ்ட் போட்டிகள் சமநிலையில் நிறைவுக்கு வந்துள்ளன.
அணிக்கு திரும்புவாரா கோலி?.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுவாரா? பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்!
தற்போது, நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடக்க உள்ளதுடன், இந்த பிட்ச் எப்போதுமே, பேட்டர்களுக்கு சாதகமாகதான் இருந்திருக்கிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய அணி, ராஞ்சியில் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடி, அதில் இன்னிங்ஸ் மட்டும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது
ராஞ்சியில் தற்போது, வறண்ட வானிலை காணப்பட்டாலும், மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவும், ஆட்டத்தின் கடைசி நாளான பிப்ரவரி 27ஆம் தேதி மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், ஆட்டத்தின் கடைசி செஷன் வரை கூட ஆட்டம் நகர வாய்ப்புள்ளது.
இந்நிலையில், கடைசி நாளிலும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அது இரு அணிகளுக்கும் சிக்கலாக அமையக் கூடும் தெரிவிக்கப்படுகின்றது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






