மனசே நெறஞ்சு போச்சு.. இப்படியொரு ஆதரவ எதிர்பார்க்கவே இல்லை.. பாபர் அசாம்!

உலகக்கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

மனசே நெறஞ்சு போச்சு.. இப்படியொரு ஆதரவ எதிர்பார்க்கவே இல்லை.. பாபர் அசாம்!

உலகக்கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 68 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

இதையடுத்து களமிறங்குய நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன்பின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஷகீல் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், ஐதராபாத் மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த ஆதரவும், வரவேற்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த மண்ணின் விருந்தோம்பலால் நெகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியது நிம்மதியளிக்கிறது. 

இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்களை தான் அதிகமாக பாராட்ட வேண்டும். ஏனென்றால் தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் சீராக விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்கள்.

பேட்டிங்கை பொறுத்தவரை ரிஸ்வான் மற்றும் ஷகீல் இருவரும் அழுத்தத்தை சிறப்பாக எதிர்கொண்டு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

நெதர்லாந்து அணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள் என்றே சொல்லலாம். ஷகீல் நல்ல முதிர்ச்சியடைந்த வீரராக இருக்கிறார். எங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தினோம். ஹாரிஸ் ராஃப் தனது வேகத்தை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்தது முதலே பாகிஸ்தான் அணி ஐதராபாத் மண்ணில் தான் தங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் சந்திப்பு, பிரியாணி என்று பாகிஸ்தான் அணியினரை இந்திய மக்கள் சிறப்பாக கவனித்து கொண்டார்கள். 

இந்திய ரசிகர்களின் வரவேற்பால் பாகிஸ்தான் வீரர்கள் நெகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் பல்வேறு முறை பதிவிட்டு நன்றி கூறி வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...