பிரித்தானியாவில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் மக்களில் ஒவ்வொரு ஐந்தில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என சமீபத்திய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் மக்களில் ஒவ்வொரு ஐந்தில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என சமீபத்திய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அதிகரிப்பு, நாட்டின் மக்கள் தொகை அமைப்பு வேகமாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய புள்ளிவிபரங்களின்படி, பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 19.6% பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். இது 2021ஆம் ஆண்டில் பதிவான 16% என்ற எண்ணிக்கையை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
2021 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், பிரித்தானியர் அல்லாத குடியேற்றவர்களின் நிகர வருகை 2.9 மில்லியன் எனத் திருத்தப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. அதே சமயம், நாட்டை விட்டு வெளியேறும் பிரித்தானிய குடிமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது இந்த மக்கள் தொகை மாற்றத்திற்கு காரணமாகும்.
இந்தப் புதிய விவரங்களுக்குப் பின்னர், நாட்டின் மக்கள் தொகை அமைப்பு எவ்வாறு மாறி வருகிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள அவசர மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆய்வு குழுக்கள் வலியுறுத்துகின்றன.
