ஹர்திக் பாண்டியாவை தூக்கி எறிந்த மும்பை இந்தியன்ஸ்... தனது பவரை காட்டிய ரோஹித்... செம ட்விஸ்ட்!
ஐபிஎல் தொடரின் முடிவில் தங்களுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதை புரிந்து கொண்ட அந்த அணி அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தாமதமாக புரிந்து கொண்டுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரின் முடிவில் தங்களுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதை புரிந்து கொண்ட அந்த அணி அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நேற்று ஆடியதுடன், இந்தப் போட்டிக்கான விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது.
அதில் ஹர்திக் பாண்டியா புகைப்படம் இல்லாமல், ரோஹித் சர்மா புகைப்படமும், பும்ரா மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் புகைப்படமும் இருந்தது.
இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விளம்பரங்களில் புறக்கணிக்க துவங்கி இருக்கிறது .
ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகர்கள் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை எதிர்ப்பார்கள் என நினைத்தால், பிறந்த மண்ணான குஜராத்தை சேர்ந்த அணியை விட்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதால் அந்த மாநில மக்களும் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.
அது மட்டுமின்றி குஜராத் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்ததை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் செல்வாக்கு குறைந்துள்ளது.
அந்த அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமே ஹர்திக் பாண்டியாவை புறக்கணிப்பதாக பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |