அவுஸ்திரேலியாவில் லாக்கருக்குள் இருந்து வந்த சத்தம்: உடைத்து பார்த்த காவல்துறை... நபர் ஒருவர் கைது
இந்த சம்பவத்தின் தொடர்பில் 57 வயதான சாண்டி நோரி என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது 10 விலங்கு கொடுமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அவுஸ்திரேலியாவின் பென்ரித் ரயில் நிலையத்தில் பைக் லாக்கருக்குள் இருந்து வந்த குரைக்கும் சத்தத்தை கவனித்த பயணி ஒருவர், NSW காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அழைக்கப்பட்டு, லாக்கர் உடைக்கப்பட்டு பார்க்கப்பட்டது.
உள்ளே இரண்டு க்ரேஹவுண்ட் நாய்கள் இருந்தன. அதில் ஒன்று உயிரிழந்த நிலையில் இருந்தது. மற்றொன்று கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அது பின்னர் உயிரிழந்தது.
இந்த சம்பவத்தின் தொடர்பில் 57 வயதான சாண்டி நோரி என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது 10 விலங்கு கொடுமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் 27ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
