முக்கிய வீரர்கள் வெளியே: ஐபிஎல் 2026 மினி ஏலத்துக்கு முன் அதிர்ச்சி: பல நட்சத்திரங்களை அணிகள் ரிலீஸ் செய்தது ஏன்?

ஐபிஎல் 2026 மினி ஏலத்தை முன்னிட்டு பல அணிகள் எதிர்பாராத வீரர்களை விடுவித்துள்ளன. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மதீஷா பத்திரனாவின் வெளியேற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெத் ஓவர்களில் தாக்குதல்மிகு பந்துவீச்சில் புகழ்பெற்ற பத்திரனா, ரூ.13 கோடி மதிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். 32 ஐபிஎல் போட்டிகளில் 47 விக்கெட்டுகள் குவித்த அவர், 4/28 என்பது அவரது சிறந்த பந்துவீச்சு சாதனையாகும். பல முக்கிய வெற்றிகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ‘கில்லர் மில்லர்’ என்ற பெயரில் பிரபலமான டேவிட் மில்லரையும் தங்களது அணியிலிருந்து நீக்கியுள்ளது. அவர் ரூ.7.50 கோடிக்கு வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த சீசனில் அவர் எதிர்பார்த்தபடி விளையாடாததே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. 141 போட்டிகளில் ஒரு சதம், 13 அரைசதங்களுடன் 3077 ரன்கள் எடுத்துள்ளார் மில்லர்.

அதே நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பகமான தொடக்க வீரர் டெவோன் கான்வேவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். நீண்டகால காயம் காரணமாக கடந்த சீசனில் அவரது பங்களிப்பு குறைந்திருந்தது. இதனால், CSK அணி அவரை ரூ.6.25 கோடிக்கு ரிலீஸ் செய்து, புதிய டாப்-ஆர்டர் கட்டமைக்க முடிவு செய்துள்ளது. கான்வே 29 போட்டிகளில் 1080 ரன்கள் எடுத்துள்ளார்; இதில் 11 அரைசதங்களும், அதிகபட்சம் 92 ரன்களும் அடங்கும்.