லண்டனில் கத்திக்குத்துச் சம்பவத்தில் யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு – திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே துயரம்!

திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருப்பது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லண்டனில் கத்திக்குத்துச் சம்பவத்தில் யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு – திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே துயரம்!

லண்டனில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் இலங்கையின் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டு திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருப்பது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவத்திற்கு சில மணி நேரங்களிலேயே அவரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக லண்டன் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.