சுப்மன் கில்லுக்கு கடும் நெருக்கடி: 'அணியை விட்டு நீக்குங்கள்' - இர்பான் பதான் கோரிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

சுப்மன் கில்லுக்கு கடும் நெருக்கடி: 'அணியை விட்டு நீக்குங்கள்' - இர்பான் பதான் கோரிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இரண்டாவது டி20 போட்டியில் கில் 10 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கில் தொடர்ந்து ஒரே மாதிரியாக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்றும், அது மிகவும் முக்கியமானது என்றும் பதான் வலியுறுத்தியுள்ளார். ஏனென்றால், ஜெய்ஸ்வால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என விளையாடாமல் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெய்ஸ்வால் அப்படிப்பட்ட திறமை வாய்ந்த வீரர் என்றும், அவர் அணிக்காக பல அதிசயங்களை செய்வார் என்றும் பதான் குறிப்பிட்டுள்ளார். 

ஜெய்ஸ்வாலால் ஒருநாள் கிரிக்கெட்டில் கூட இரட்டை சதம் அடிக்க முடியும். டி20 போட்டியில் சதம் அடிக்கக்கூடிய திறமை இருந்தும் அப்படிப்பட்ட நல்ல வீரர் வாய்ப்புக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விஷயத்தில் இந்திய நிர்வாகம் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கில்லின் நடப்பு ஆண்டு (சர்வதேச) டி20 செயல்திறன் கவலை அளிக்கிறது. நடப்பாண்டில் அவர் 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 169 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 24 என்று அளவில் இருக்கிறது, மேலும் ஸ்டிரைக் ரேட் 148 என்ற அளவில் உள்ளது. அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதுவரை கில் இந்தியாவுக்காக 30 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 747 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 28 ஆகும். மேலும் கில் ஸ்டரைக்ரேட் 141 என்ற அளவில் இருக்கிறது. இதுவரை அவர் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்திருக்கிறார்.

மறுபுறம், ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக 22 இன்னிங்சில் 723 ரன்கள் அடித்திருக்கிறார். ஜெய்ஸ்வாலின் சராசரி 36 என்று அளவில் இருக்கின்றது. மேலும் அவருடைய ஸ்டரைக் ரேட் 164 என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது. ஜெய்ஸ்வால் ஐந்து அரை சதம் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார்.