ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் – மழையால் ஆட்டம் பாதிப்பு! ரத்தானால் என்ன நடக்கும்?
ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
 
                                ஐபிஎல் 2025 சீசனின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
இந்த முக்கியமான மோதலில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) எதிர்கொள்ளும். தோல்வியடைந்த அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இந்த நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால், போட்டி தாமதமாகிறது. மைதான ஊழியர்கள் தற்போது புல்வெளியை தார்பாயால் மூடி உள்ளனர்.
மழை தொடர்ந்தால் என்ன நடக்கும்?
9.30 மணி முன்பு ஆட்டம் தொடங்கினால் முழு 20 ஓவரும் நடைபெறும். தாமதமானால்: ஓவர்கள் குறைக்கப்படும். ஒருவேளை டக்வொர்த் லூயிஸ் விதி அமிலுக்கு வந்தால், அது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக அமையும்.
ஒருவேளை ஆட்டம் ரத்தானால் ரிசர்வ் டே இல்லாததால், பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏனெனில், லீக் சுற்றில் பஞ்சாப் அதிக நெட் ரன் ரேட் (NRR) வைத்து உள்ளது.
இப்போதைய நிலையில், மழை நிற்குமா, ஆட்டம் தொடருமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






