4 கோடி போதாது... ஐபிஎல்ல விளையாட முடியாது... விலகிய நட்சத்திர வீரர்.. ரசிகர்கள் ஷாக்!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஹேரி ப்ரூக், திடீரென்று, சொந்த காரணங்களை கூறி விலகிவிட்டார்.

 4 கோடி போதாது... ஐபிஎல்ல விளையாட முடியாது... விலகிய நட்சத்திர வீரர்.. ரசிகர்கள் ஷாக்!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஹேரி ப்ரூக், திடீரென்று, சொந்த காரணங்களை கூறி விலகிவிட்டார்.

கடந்த ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன் நடைபெற்ற ஏலத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை 13 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அவர், 11 போட்டிகளில் களமிறங்கி 190 ரன்களை மாத்திரமே அடித்த நிலையில்,  ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான மினி ஏலத்தில், ஹேரி ப்ரூக்கை, டெல்லி கேபிடல்ஸ் அணி 4 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

இந்த நிலையில், குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால், அதிருப்தியில் 17ஆவது சீசனில் இருந்து ப்ரூக் விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்கள் விளையாட மறுப்பு... மாற்று வீரர் தயார்... ஹர்திக் அதிரடி... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற ப்ரூக், திடீரென்று முதல் போட்டி துவங்கும் முன்பே நாடு திரும்பிவிட்டார். சொந்த காரணங்களுக்காக அவர் நாடு திரும்பியதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக, இந்தியா வருமாறு டெல்லி கேபிடல்ஸ் அணி அழைத்த நிலையில், அதற்கு 'என்னால் பங்கேற்க முடியாது. காரணம் கேட்காதீர்கள்' என ப்ரூக் அதிரடியாக அறிவித்தாராம்.

அத்துடன், 7ஆவது சீசனில் இருந்து விலகிவிட்டு, 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளாராம். ஐபிஎலில் ஏலம் எடுக்கப்படும் இங்கிலாந்து வீரர்கள், திடீரென்று சொந்த காரணங்களை கூறி விலகும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

இந்நிலையில், ஹேரி ப்ரூக்கிற்கான மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஈடுபட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை, மார்ச் 23ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...