ஹர்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ரோஹித்? வெளியான தகவல்!

டி20 உலகக் கோப்பை தொடரானது, ஒரே மாதத்தில் நடந்து முடிய உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹர்திக் தொடர்ந்து 4 ஓவர்களை வீசினால், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஹர்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் ரோஹித்? வெளியான தகவல்!

ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை பிசிசிஐ தேர்வு செய்ய முடிவு செய்தது.

இந்நிலையில், தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்.

ஹர்திக் பாண்டியாவை, துணைக் கேப்டனாக நியமித்தற்கு பல காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், 4 ஓவர்களை வீச முடியும் என அவர் ஒப்புக்கொண்டதால்தான், துணைக் கேப்டன் பதவியை கொடுத்தார்களாம். இதுவே ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரானது, ஒரே மாதத்தில் நடந்து முடிய உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹர்திக் தொடர்ந்து 4 ஓவர்களை வீசினால், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்த காரணத்தினால்தான், அவர் மும்பை அணிக்கு அவ்வபோது மட்டுமே பந்துவீசி வருகிறார். இது தெரிந்தும், அவர் 4 ஓவர்களை வீச வேண்டும் என ரோஹித் உத்தரவாதம் கேட்டு, அதன்பிறகுதான் துணைக் கேப்டனாக நியிமக்கப்பட்டார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...